பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சுவருக்கு உட்புறமாக இரண்டாவது பிரகாரம் ; சபையைச் சுற்றிப் புறத்திலுள்ள மூன்ருவது பிரகாரம் ; ஆக சங்கிலியிலிருந்து மூன்று பிரகாரங் கள் காணப்படும். o தெற்குப் பார்த்த சபையின் முகப்பில் மூன்று வாயில்கள் உள்ளன. அவற்றை அடுத்து இரு சாளரங்கள் இருக்கின்றன. உள்ளே அகன்றி ருப்பது அகவல் மண்டபம் ; இதன் இரு பக்கங் களிலும் (கிழக்கு, மேற்கு) இரண்டு வாயில்கள் ; அகவல் மண்டபத்தில் நான்கு சாளரங்கள் உள்ளன. அகவல் மண்டபத்தையடுத்த மண்ட பத்திற்குத் திருமண்டபம் என்று பெயர். இதில் மேற்புறம் சிற்சபையும் கீழ்ப்புறம் பொற்சபையும் அமைந்துள்ளன. வடபுறத்தில் உள்ளதுதான் ஞான சபை. மூன்ரும் பிரகாரத்தில் பக்கவழிகளில் இரண்டு வளைவுகளும் நீராழிப் பத்தியில் 22 வளைவு களும் இருக்கின்றன. இதில் உள்ளடங்கிய ஏழு வாயில்களும் 14 சாளரங்களும் காணப்படும். ஞானசபையின் தென்புறத்தில் கண்ணுடிக் கதவு களுடன் கூடிய 3 வாயில்கள் கறுப்புநிறம் பூசப் பெற்றுள்ளன. மூன்று வாயில்களுக்கும் பொது வான ஐந்து படிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்கிலும் ஐந்தைந்து படிகள் உள்ளன. ஞான சபையின் உள்ளே இருபக்கங்களிலும் 12 தூண் கள் உள்ளன. ஞானசபையின் நடுவே அதிட் டான பீடம் இருக்கிறது. இதன் தென்புறத்தில் 5 படிகள் உள்ளன. அப்பீடத்திற்குமேல் நாற்கால் மண்டபம் உள்ளது. இது ஜோதி ஞானபீடம் எனப்படும். இதற்கு நான்கு துரண்களும் நான்கு