பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 ஞானசபைக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரம் வே ெற து வு ம் வேண்டாம்; ' போலியருட்பா மறுப்பு கட்டி டத்தில் இடிவிழுந்ததாகவே கூறும். அருட்பெருஞ்ஜோதி பிரசோர்ப்பத்தி ஆண்டு தை மாதம் 28 பூச நாளில் (25-1-1872) முதன்முதலாக ஞானசபை யில் நம்பெருமான் அன்பர்களுக்கெல்லாம் அருட் பெருஞ்ஜோதி தரிசனம் செய்வித்தார். தைப்பூச நாளில் விடியற்காலம் மேற்கே சந்திரனும்,கிழக்கே சூரியனும் காணப்படும். அந்நேரத்தில் ஞான சபையில் அரு ட் பெ ரு ஞ் ஜோ தி யை க் காட்டி யருளினர் அடிகள். நம்முள் இருக்கின்ற ஆன்மாவில் அருட் பெருஞ்ஜோதியாக ஆண்டவன் இருக்கின்றன். அப்பெரும் பேரொளிமயமாக வே ண் டி ய ஆன்மாவை ஏழுதிரைகள் மறைத்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்தியைக் குறிக்கு மென்பர். அவை ஆன்மாவை அறியமுடியாதபடி மறைத்துள்ளன. அவற்றுள் கருப்பு, நீலம், பச்சைத் திரைகளை நாம் தெய்வ நினைவிலிருந்து நம் முயற்சியால் அகற்றிக்கொள்ளவேண்டும். பச்சைத் திரை இருகூருனது. வெளி ப் புற ம் கருமையிற் பச்சையாகவும், உட்புறம் பொன் மையிற் பச்சையாகவும் இருக்கின்றபடியால் இகலோக லட்சியமுள்ள வெளிப்புறப் பச்சைத் திரை வரையில் நீக்கிக்கொண்டபோது, பரலோக