242 சார்பில் இறைவனுக்கு விண்ணப்பம் எழுதினர். அதில் தாம் திருவருட் சுதந்தரத்தைப் பூரணமாகப் பெற்ற பேற்றினை விரித்துரைக்கின்ருர். இறுதியில் * எல்லாச் சீவர்கட்கும் எனக்கறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் உரிமையுடையவர் களாக்கி வாழ்வித்தல் வேண்டும்’ என்று வேண்டு கோள் விடுக்கின்ருர். சித்திவளாகத்தில் பந்தலிட்டு அலங்காதது ஞானதீபம் வைத்து சூனிய சிம்மாசனம் அமைத்து ஆண்டவன் அதில் வீற்றிருப்பதாகப் பாவித்து தாமே சன்மார்க்க அன்பர்களுடன் வலம்வந்து பாடிநின்றனர். அவருள் காரணப்பட்டு கந்தசாமிப் பிள்ளே என்னும் பெரியார் இருந்தார். அவர் தமிழிலும் இசையிலும் வல்லவர். அவருக்கு ஒரு மயக்கம் இருந்துவந்தது. நம்பெருமானிடம் குறையிரந்து நின்ருர். வள்ளற்பெருமான் திருநீறு நல்கிக் குணப்படுத்தித் தம் மாணவருள் ஒருவராகும் பேறளித்துத், தக்க உத்தியோகம் தருவோம்” என்றனர். அதுதொடங்கி அவர் அடிகளோடு உறைந்துவந்தார். இராமலிங்க சுவாமிகள் சரித் திரக் கீர்த்தன, சற்குருவெண்பா அந்தாதி, குரு நேச வெண்பா, ஆனந்தக்கண்ணி முதலான மிகச்சிறந்த இருபத்தாறு நூல்களைப் பாடியுள் ளார். இவற்றுள் சுவாமிகளைப்பற்றிய பலப்பல குறிப்புக்கள் உள்ளன. திருவருட்பாவின் பல நுட்பங்கள் இவரது பிரபந்தங்களில் காணப்படு
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/255
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
