244 கண்மலர்ந்து எழுவதும் ஒரேநேரத்தில் நிகழ, அடிகளின் ஒப்பற்ற பேரொளிக் கதிர்வீச்சால் இவர் போதமயமாகிக் கிடக்கநேர்ந்தது. இவ்வாறு கிடக்கின்ருரே என்று இராமலிங்கப் பெருமானிடம் அன்பர்கள் முறையிட, நீவிர் அவரை ஒன்றும் செய்யவேண்டாம், தாமே எழுவார் ” என்றனர். அவ்வாறே அவர் நாலைந்து தினங்கள் அசை வற்றிருந்து பின்பு மெல்ல வெளிவந்துலவினர். எனினும் மாதக்கணக்கில் ஒன்றும் பேசாவண்ணம் மோன நிலையில் விளங்கினர் என்ப. இவரே சுவாமிகளிடம் தமக்குச் சாதனைசெய்யும் வழி காட்டியருள வேண்டினர். அதற்கு நம் வள்ள ற் பெருமான், நீ என்னைப்போல ஏழை; சாதனை செய்தால் சிறிது ஒளி தோன்றும்; சில சித்திகள் நடக்கும்; அதைக்கண்டு பல்லிளித்துக் கெட்டு விடுவாய். ஆதலின் சாதனை ஒன்றும் வேண்டாம், எல்லா உ யி ரு ம் உன்னுயிர்போல் நினைக்கும் பழக்கத்தை வருவித்துக்கொள். அப்பழக்கம் வந்தவன் எவனே அவனே எல்லாம் வல்லவனும், கடவுளுமாவான் ” என்றருளினர்கள். அவரும், ஒத்தாரை யும் இழிந் தாரையும் நேர்கண் டுவக்கவொரு மித்தாரை வாழ்விப்ப தேற்ருர்க் கமுதம் விளம்பியிடு வித்தாரைக் காப்பது......... r -திரு. 6: 87:5 என்றபடி பசித்தவர்க்குக் கஞ்சியூற்றிப் பேரன்ப ராக வாழ்ந்துவந்தனர். அவரது மகன் வீராசாமி ரெட்டியார் அப்போது ஐந்துவயது சிறுவர்.
பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/257
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
