பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 அனுபவம் அறிவின்கண் தோன்றும் ' என்றனர். கொடியேற்று விழாவில் சுவாமிகள் கூறியவற்றை எல்லாம் உபதேசம் என்ற தலைப்பில் அன்பர்கள் தொகுத்துரைத்தனர் என்ப. சீமுக ஆண்டு கார்த்திகை மாதம் புனர்பூச நாளில் தாம் சித்திவளாகத் திருமாளிகையில் வைத் திருந்த சத்திய ஞானதீபத்தைப் புறத்தில் வைத்து “இத்தீபத்தைத் த ைட படா து ஆராதியுங்கள். இந்தக் கதவு சாத்திவிடப்போகிருேம். இனிக் கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் உங்க ளுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், நினைந்து நினைந்து உணர்ந்து...... -திரு. 6. 110; 1 என்னும் பாடலிற் கண்டபடி தெய்வபாவனையை இத்தீபத்திற் செய்யுங்கள். நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிருேம். இனி எல்லா உடம்பு களிலும் புகுந்துகொள்வோம்” என்று ஞானதீப விளக்கம் அருளினர். சீமுக வருடம் தைமாதம் 19 வெள்ளிக்கிழமை புனர்பூச நாளில் (30-1-1874) வள்ளற்பெருமான் அற்புதப் பத்திரிகை எழுதினர். இதில் அடிகள் தாம்பெற்ற இன்பத்தை மக்கள் எல்லாரும் பெறவேண்டுமென அறிவிக்கின் ருர்கள். " நீவிர்களும் அ வ்வாறு பெற்றுப் பெருங் களிப்பு அடைதல் வேண்டுமென்று, எனக்குள்ளே