பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 என்று வி ள க் கி ய வ ா று வருவித்தவண்ணமு நானே இந்தமாநிலத்தே செயும் வண்ணமுந்: தானே தெரிவித்தருளிற்று பாரீர்” என்பதற்கேற்ப சொல்லவேண்டியதெல்லாவற்றையும், வையகம் வானக மற்றுள எல்லாம் மணக்கும்படி விளக்கி யுரைத்துப் பேரருள் ஆடல் நிகழ்த்தி வருகின் ருர். இறுதியாக, பிச்சுலகம் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன் இச்சையெலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே அச்சமெலாந் திர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே என்று திருவாய்மலர்ந்தனர். மேலும், முன்னெச்சரிக்கையாக ஒருசில வெளி யிட்டனர். வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள் ளும் தருணம் வெளியிட்டவை : " நாம் உள்ளே பத்துப்பதினைந்து தினமிருக்கப் போகின்ருேம். பார்த்து அவநம்பிக்கை அடையா தீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்குந் தோன் ருது வெறுவிடாகத்தானிருக்கும் படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார். சுத்தப் பிரணவ ஞானதேகத்துடன் வெளிப்படுவோம். நாம் திருக்கதவை மூடியிருக்குங் கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ’’ இ ல் வா று அறிவித்து மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் தாமிருந்த அறையில், அடியில் குறுக்குச் சட்ட