பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மாத்திரமுடைய பலகையின் மீது கீழ்மேற்றிசை யாக, வடக்கு நோக்கி இடக்கை தலையிற்ருங்க, சீமுக ஆண்டு தை மாதம் 19வ வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு கடகத்தில் சந்திரனும் மகரத்தில் சூரியனும் பூரணமாக விளங்கும் ஞானநிறைவுள்ள நல்லநாளில் (30-1-1874) அமர்ந்துகொண்டு, கதவை வெளியில் பூட்டித் திருக்காப்பிடும்படி வேண்டினர். அன்பர்கள் கதவைச் சாத்தியபடியே விட்டனர். பின்னர் அடிகளின் கட்டளைக்கு அஞ்சி, நான்குநாள் கழித்து தை 28-ஆம் நாள் (3-2-1874) கதவைப் பூட்டினர். a பின்னைய செய்தி | வள்ளற்பெருமான் திருக்காப்பிட்டுக்கொண்ட பின், சிலநாள் கழித்து மஞ்சக்குப்பம் கலெக்டர் ஜே. எச். கார்டின்ஸ் ஐ. சி. எஸ்., இ ன் .ெ ைரு வெள்ளே க்காரர், தாசில்தார் வெங்கடராம ஐயர் ஆகிய மூவரும் மேட்டுக்குப்பத்திற்குக் குதிரை மேலிவர்ந்து வந்து, சுவாமிகளின் மறைவுபற்றி விசாரணை நடத்தினர். வந்தவர்களில் மற்ருெரு வெள்ளைக்காரர் அப்பொழுது மஞ்சக்குப்பத்தி லிருந்த பெரிய டாக்டர் என்று கூறுப. ஆல்ை, T. W. G. செட்டி தமது நூலில் அவர் ஒரு ரெவினியூ போர்டு மெம்பர் என்றும் போலீஸ் அறிவிப்பின் பேரிலேதான் கலெக்டர்முதலானேர் விசாரணைக்கு வந்தனர் என்றும் கூறுகின்ருர். வெள்ளேயர் இரு வரும் சித்திவளாகக் குடிசையைச் சுற்றிவந்து பார்த்து ஆட்சேபத்திற்கு இடமாக யாதும் காணப் படாமையால், பெரியோர்கள் எம் மதங்களிலும்