பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 எறும்பு ஈருகத் தோன்றிய சரீரங்களிலுள்ள ஜீவான்மாவே திருச்சபையாகவும், அவற்றுள் இருக்கும் பரமான் மாவே பதியாகவும் கொள்ள வேண்டும். உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒரு திருப் பொதுவென அறிந்தேன் -- -திரு. 6:132; 75 உயிருள்யாம் எம்முள் உயிர்இவை யுணர்ந்தே உயிர்நலம் பரவுக............ -திரு. 6 : 1 : 973 என்றமையால் உயிர்களைப்பற்றி ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள்ளிருக் கின்ற கடவுள் விளக்கமாகிய ஏகதேச அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும். இதனை வெளிப்படுத்த எழுந்த கட்டுரைகள் ஜீவகாருண்யஒழுக்கம் எனும் மூன்றுபகுதிகளாகக் கிடைக்கின்றன. இவற்றுள் சுவாமிகள் இவ் வுண்மையை விவிைடையாக வைத்து மிக எளி தாகக் கூறுகின்ருர். எங்கே கருணை யியற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே -திரு. 6: 1:961 ஆன்ம இயற்கை விளக்கமாகிய சீவ தயவு சீவகாருண்யமாகும். இது பூரணப்பட்டபோது கடவுள் இயற்கை விளக்கமாகிய கடவுள் தயவு, அஃதாவது திருவருள், ஆன்மாக்களில் ஏகதேச மாக இருப்பது வளர்ந்து உருவாகும். இத் திரு வருள் பூரணப்பட்டால் ஆன்மாக்களில் கடவுள் இயற்கை விளக்கம் நிறைகின்றது. அப்போது