பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 எம்பெருமான் நின்விளையாட்டு என்சொல் கேளுன் ஏதுமறி யாச்சிறியே னெனைத்தா னிங்கே செம்புனலாற் குழைத்த புலாற் சுவர்சூழ் பொத்தைச் சிறுவிட்டி லிருட்டறையிற் சிறைசெய் தந்தோ -திரு. 1 : 5: 87. பம்பரத்தி டிையலைப் படுத்து மிந்தப் பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை கொம்பரற்ற இளங்கொடிபோற் றளர்ந்தே னென்னைக் குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ -i. -திரு. 1 : 5:88 உலகுயிர்த்துயரால் பட்டதெல்லாம் போதும் ; இனிப் படமுடியாது; ஆதலால் என் உடல், உயிர் ஆதிய எல்லாம் நீயே எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக் கருள் வாய் என்று ஏத்துகின் ருர். நமது தேகம் அநித்தியமானதென்றும் நமதென எண்ணிக் கொண்டிருக்கும் தேக, போக, சீவ சுதந்திரங்கள் நித்தியமானவை அல்ல என்றும், உலகில் து ன் ப மே மல்கியுள்ளதென்றும் நினைப்பதற்கு நமக்கு நேரமில்லை. நாமெல்லாம் சாமாறே விரை கின்ருேம். தேக போகங்களிலுள்ள பற்றினை விடு வதற்குப் பற்றற்ற பரம்பொருளைப் பற்றவேண்டும். " அற்றது பற்றெனில் உற்றது வீடு ’ என்பார் பிறரும். போகமெல்லாம் பொய்யென்னும் அநித் திய விவேகம் வந்தாலன்றிப் பற்று அறுதல் இல்லை. யான், எனது என்னும் அகங்கார மமாகாரங்கள் ஒழிவதற்கு அநித்திய விவேகம் வரவேண்டும். யானே பொய், என்னெஞ்சும் பொய், என் அன்பும் பொய் என்று உணர்ந்தால் இறைவன் ஒருவனே மெய்யானவன் என்ற எண்ணம் உதிக்கும். இவ் வெண்ணம் நலம் பயக்கும். 3