பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தாய்கொண்ட திருப்பொதுவி லெங்கள்குரு நாதன் சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ கனிந்தபழங் கொண்டுவருங் கால்அதனை மதமாம் பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின்படுமோ முன்படுமோ பிணங்கியொளித் திடுமோ வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ வென்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணமறிந் திலனே -திரு.6: 18 : 8 இங்ங்னமாகத் திருவருள் வேட்டுப் பாடிய பாக்கள் பலப்பல. நெஞ்சறிவுறுத்தல், பிள்ளைச்சிறு விண்ணப்பம், பி ஸ் 8ள ப் .ெ ப. ரு வி ண் ைப் ப ம், ஆற்ருமை, சத்தியப்பெருவிண்ணப்பம் முதலியன எல்லாம் நமது சிறுமையை விரித்துரைத்து அருள் வேட்பனவேயாகும். இனி, இறைவனது பெருமையை எண்ணித் துதிக்கும் பாடல்களும் விண்ணப்பங்களும் மலிய உள்ளன. இவற்றுள் சத்திய ஞானவிண்ணப்பம் மட்டும் நெஞ்சையள்ளும் பான் மையது. இதில் முழுமுதற்கடவுளின் திருவருட் ச மூ க த் ைத அடைந்த உண்மை ஞானிகளின் சித்திவல்லப தரம் முதலில் பேசப்படும். இவர்கள் எழுவகைப் படுவர் என்றும் இவர்களது சித்திவல்லப தரத்தை வேதாகமங்களும், சத்திசத்தர்களும், ஐந்தொழில் செய் நாதரும் உணர்ந்து உணர்ந்தும், உண்ர்ச்சி செல்லாமையின் மயங்குகின்றனர் என்றுங்கூறும். ஆயினும் அது அவர்கள் தம் பெருமையெல்லாம் ஒருவாறு குறிப்பிட்டு விளக்கும். அவர்களைச்