பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 திருவருட் சமூகத்தின் பெருமையையும், ஆண்ட வனது பெருமையையும் ஊன்றி விசாரித்து நமது சிறுமையை விண்ணப்பித்துச் சத்விசாரம் செய்ய வேண்டும். இதுகாறும் எழுந்த வேதம், ஆகமம், உபநிடதம், தேவாரம் முதலிய பன்னிரு திருமுறை கள், வேதாந்த சித்தாந்த மெய்கண்ட நூல்கள், நிருவாய்மொழி, திருப்புகழ், திருவருட்பா முதலிய னவும் ஏ&னய தெய்வத் திருநெறி நூ ல் க ள் அனைத்தும் சத்விசாரத்திற்கே எழுந்தவையாகும்.