பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 காழியர் கோன் முத்துச்சிவிகை பெற்றுப் பாடிய பதிகம் சிறப்புடையது. இந்நிகழ்ச்சி திருநெல் வாயில்அறத்துறை என்ற ஊரில் நடந்ததாக அறி கின்ருேம். இத் தேவாரப் பதிகத்தில் ஆண்டவன் திருவருள் குறிப்பிடப்படுகின்றது. அருள் என்ற சொல் இப்பதிகப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஆளப்பட்டுள்ளது. “எந்தை ஈசன் எம்பெருமான்’ கானத் தொடங்கும் முதற்பாடல் அடிகள் தம் மருளே ’ என்று முடிகின்றது. எந்தையே, ஈசனே, எம் பெருமானே என்று ஏ த் தி த் துதிப்பவர்க் கல்லால் ஏனையோர்க்கு இறையருள் கிடைப்பதரிது 41ன்று ஞானசம்பந்தர் அறிவுறுத்துகின் ருர். இப் பதியில்தான் அவருக்கு ஆண்டவன் முத்துச் சிவிகை கொடுத்தருளினுன். இவரது வரலாற்றைப் பெரியபுராணத்தில் விரிவாகக் காணலாம். பத்திச்சுவை நளிை சொட்டச் சொட்டப் பாடிய .ே ச. க் கி ழ ா ர் என்னும் தெய்வப் புலவர்க்கு ஆண்டவன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்தருளின்ை. இச்சொற்ருெடரைக்கொண்டு தொடங்கிய சேக்கிழார் தமது பெரியபுராணத்தை ' உலகெலாம் ' என்றே முடிக்கின் ருர். அன்றியும் இச்சொற்ருெடர் பெரியபுராணத்தின் நடுவிலும் ஆளப்படுகின்றது அஃதாவது ஞானசம்பந்தர் முத்துச்சிவிகையில் உலகெலாம் உய்ய இவர்ந் தருளிஞர் என்பர். உலகெலாம் என்ற இச்சொற்ருெடரைப் பரசிவ மெய்ம்மொழி என்று இராமலிங்க அடிகள் விளக்கி யுள்ளார். இதற்குப் பொருள் கூறவந்த அடிகள்