பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முனையும். ஆண்டவன் பால் வைத்த அயரா அன்பு முதிரும். அதில் அருள் விளேயும். இன்பம் பெருகும். ஆன்ம சிற்சத்தி நிலையிலிருந்து அருட்சத்தியாக மாறும். ஆண்டவனேக் கலந்து அதன் மயமாகும். இதனை விளக்கும் பாடல்கள் : அருளளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப் பொருளளித்தான் என்னுட் புணர்ந்தான் -திரு. 6: 86: ! இறைவன் வருவிக்க வுற்றே னருளைப் பெற்றேனே -திரு. 6: 93; 9 அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால் இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் ஒருருவாக்கி அருள்நிலை பெற்றனை அருள்வடி வுற்றன அருள்அர சியற்றுகஎன் றருளிய சிவமே -திரு. 6 : 1 : 1018 நினைப்பதற்கும் எட்டாத இந்த அனுபவத் தானத் திற்குப் பரநாதமென்று பெயர். இது பரநாதத்தலம் என்றுங் கூறப்படும்; பரம்பர வெளியில் அனுபவ மாகும். இவ்விடத்தில்தான் பரநாத ஒலி கேட்கும். மிக அருமையான ஜோதி மலேயொன்று தோன் றும்; அதனுள் ஒரு பேரொளி வீசும். அருட்சத்தி யாக மாறியுள்ள ஆன்மா அருள் உருவம் பெறும்; அருள்மயமாகும். என்புருப்பொன் னுருவாக்க எண்ணிவரு கின்ருர் என்று திரு நாதஒலி இசைக்கின்ற தம்மா -திரு. 6 82 : 48