பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காண்க. இச்சிவானுபவம் சுத்த சிவதுரியாதீத மேல்நிலையில் விளைவதாகும். இதனைச் சுத்தந் தோய்ந்த சமரச சாத்துவிதம் என்று ஒருவாறு கூறலாம். சி வ ம ய மா ய் நிறைதலே சுத்தசன் மார்க்கத்தின் முடிபு. இத்தருணத்தில் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய அந்தங்களில் குறிப்பிடப்படும் துவிதம், அத்துவிதம், விசிட்டாத்துவிதம் என்னும் நிலை யனுபவக் கோட்பாடுகளைச் சற்று எண்ணுதல் இன்றியமையாததாகின்றது. தத்துவமசி a சாந்தோக்கிய உபநிடதம் முதன் முதலாக இந்த மகாவாக்கியத்தை வெளியிட்டது. இதற்கு மூன்றுவகையாகப் பொருள்கொள்கின்றனர். இம் மூன்றும் தனித்தனிக் கொள்கையாக விரிந் துள்ளன. ஒப்பற்ற ஒருபெருந் தெய்வத்தை யடைந்த ஆன்மா எவ்வாறு அத்தெய்வத்துடன் இன்புறும் ? இதை விளக்கும் இக்கொள்கைகள் அவ்வப் பெரியோர்களின் அனுபவ வல்ல பத்திற்கு ஏற்பச் சிறந்து பெருகியிருக்கின்றன. துவிதம் துவைதம் என்பதைத் துவிதம் என்று உரைப் பர். இதற்கு இரண்டானது என்று பொருள். இக் கொள்கையினர் த த் து வ ம. சி என்னுஞ் சொற்ருெடரை, I -H