பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 சுத்த சித்தாந்தம் வீரசைவ சித்தாந்தத்தை வலி யு று த் தும் குமாரதேவர் தத்துவமசி மகாவாக்கியத்தைத் தொம்பதம், தற்பதம், அசிபதம் எனப் பிரித்துச் சிவாத்துவித சுத்த சித்தாந்தஞ் செய்கின்றர். தொம்பத அர்த்தமான கூட்த்தம் விளங்கில்ை டி_ யான், எனது அற்று ஆகாமியமலமும்,ஆணவகர்ம - மும் அகலும். தற்பத அர்த்தமான அருள் விளங் கில்ை சஞ்சிதம், மாயை அகலும். அசிபத அர்த்த மான-அருளாகிய அங்கமும் சிவமாகிய லிங்கமும் விளங்கினுல் பிராரத்தம் போய்விடும். அப்போது ஆன்மா திருவருளே வடிவாய், சிவத்திற்கு அங்க மாய் நின்று சிவானுபவம் பெறும் என்பர். வீரசைவ சித்தாந்தத்தில் துலதேகம் அருள் தேகமாகுமன்றி விழுதல் இல்லை. ஆன்மா வேருெரு தேகத்தை எடுத்தால்மாத்திரந்தான் தான் அடைந்திருந்த தேகம் இவ்வுலகில் உயிரிழந்து கிடக்கும். அன்றி ஆன்மா வேருெரு தேகத்தை எடுக்காமலிருப்பது உண்மையானல் தான் அடைந்திருந்த இத்தேக மானது உயிரற்று இங்கே விழாது. இவ்வாருக சீவன் சிவத்தைப் போயடைந்தது உண்மை யானுல், தான் அடைந்திருந்த இத்தேகத்துடன் இவ்வுலகிற்ருனே சிவாங்கமான திருவருளாய்க் கரைந்து வான்கலந்து நிற்கும். இதனைச் சிவத்திற்கு அங்கமாதல் என்பர். வெளியாய் அருளில் விரவுமன் பர்தேக மொளியாய்ப் பிறங்கிய துமுண்டோ பராபரமே உலகவர்போற் சடல மோய உயிர்முத்தி o இலகுமெனல் பந்த வியல்பே பராபரமே -தாயுமானர்