பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மலர்தலை யுலகத்து உயிர்போகு பொதுநெறி புலவரை யிறந்தோய் போகுதல் பொறேன் -இளங்கோவடிகள் மண்மேல் யாக்கை விழுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணு எண்ணக் கடவேனே அடிமை சால அழகுடைத்தே -திருவாசகம் சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங்க ளான சுருதிச் சுடர்க்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்ருர் குறிப்பறிந் தார்களே -திருமந்திரம் 1477 தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந் தங்குஞ் சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர் இங்கிவ ராக வழிவற்ற யோகமே -திருமந்திரம் 1510 என்பவாகலின் உயிர் உடம்பில் உள்ளபோதே ஆண்டவன் அ ரு எளி ைல் கருவிகரணங்களைக் கொண்டு மலங்களைக் கழுவித் தன்னை அறிந்து அருளை அனுபவித்தல் வே ண் டு ம். மேலும், அருளைப் பூரணமாகப் பெற்று அவ்வருளால் தூல தேகத்தைச் சுத்ததேகமாக்கிக்கொண்டு அதனுள் சிவபரம்பொருளாகிய இறைவனைக்கண்டு சிவமாகி நிறைதல் வேண்டும். இதுவே உண்மையில் 'சிவானுபவமாகும். இங்ங்னம் பெரும்பேறு