பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஊனவடிவும் ஞானவடிவும் சுத்த சன்மார்க்கத்தில் ஊன உடலாகிய நமது உடம்பு ஞான வடிவாகிய கடவுள் உடம்பாக மாறுவதைத்தான் இராமலிங்க அடிகள் விரித் துரைக்கின் ருர்கள். மனித தேகம் அசுத்த பூத' காரிய தேகம். இது சுத்ததேகம். பிரணவதேகம், ஞா ன .ே த க ம் என மாறவேண்டும். இவை முறையே அன்புருவம், அருளுருவம், இன்புருவம் எனவும் கூறப்படும். சுத்ததேகத்தைப் பொன் னுருவம் என்றும் சுவர்ணதேகமென்றுங் கூறுவர். ஐம்பூதங்களால் ஆகிய நமதுடல் சுத்தமாவது எங்ங்னம்? அசுத்தபூதகாரிய அணு க்க ளும், அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களும் ஆகிய அசுத்த தேகத்தைச் சுத்த பூதகாரிய அணுக்களால் ஆகிய சுத்த தேகமாக மாற்றிக்கொள்ளவேண்டும். சுத்த தேகம் பிரணவ தேகமாக மாறும். பிரணவ தேகம் ஞானதேகமாக மாறிநிற்கும். இந்த மூன்று வடிவங்களையும், மணி வாசகப்பெருமான் பெற்றனர் என்று வடலூர் அடிகள் விளக்குவதைக் கூறினேம். அசுத்த தேக மாகிய நமதுடல் சுத்ததேகமாக மாறுவதை இனி விளக்குவாம். நமது உடல் ஐம்பூதச் சேர்க்கையானது. இதனைத்திருமங்கையாழ்வார், ' மண்ணுய் நீர்எரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணுர் ஆக்கைதன்னுள் புலம்பித் தளர்ந்து'