பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தாயிற்று. இத் தெய்வத்துாண்டுதல் திருவருளாக வும், அருள் ஒளியாகவும் உள்ளது. சுத்ததேகம், பிரணவதேகம், ஞானதேகம் ஆகிய பொன் னுருவங்களைத் தி ரு வ ரு எளி ன் பூரணத்தைக் கொண்டுதான் பெறவேண்டும் என்று அடிகள் கூறுகின்றனர். அருட் பூரணத்தைப் பெறுமாறு யாங் நனம் ? பூதவுடலில் உள்ள உயிருக்குச் சிற்றறிவும், கரணங்களும் சுதந்தரமாக உள்ளன. இவற்றைக் கொண்டு கடவுள் சுதந்தரமாகிய அருளைப்பெறுதல் வேண்டுமென்பார். நமது உடம்பில் உள்ள உயிரில் இறைவன் இருக்கின்ருன் என்றும், நம்முயிரை இறைவன் அருள் ஒளியின் ஒரு சிறு கூறு (ஏகதேசம்) என்றும், அந்த , அருள் ஒளியின் ஏகதேசத்தைப் பூரணமாக்கிக்கொள்ள வேண்டுமென்றும், அப்போது நம்முடம்பு அன்புரு வமாகி அருளுருவமாகும் என்றும், “அருள் வடிவு ஒன்றே அழியாத் தனிவடிவு ' என்றும், அதல்ை அவ்வருளைப் பெறமுயலுக என்றும் சுவாமிகள் அறி வுறுத்துகின்றனர். ஆகவே, அருளேப் பெறுவதற்கு நமது சிற்றறிவையும் கரணங்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதாயிற்று. மிகச்சிறு அளவில் நம்மிடம் தரப்பட்டுள்ள திருவருளே மிகப்பெரு அளவில் அருளின் நிறைவாக மாற்றியமைத்துக் கொள்ளுவதற்கே நமக்கு உ ட ற் க ரு வி க ளு ம், கரணங்களும் பயன்படவேண்டும். அந்த அருளே நமது அன்பினுல்தான் பெறமுடியும். அன்பு பெற்றெடுத்த குழ வியே அருள் என்று வள்ளு வருங் கூறுவார். ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்வதன் மூலமாக அருளைப் பெறலாம். நமது