பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நாயகனே என ஆண்டவனே ஏத்துவோம் வாரீர் எ ன் று நம்மையெல்லாம் அழைக்கின்ருர்கள். ஏத்தும் இம்மொழிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாதையில் (மார்க்கத்தில்) கிடைக்கும் அனுப வத்தைக் குறிப்பதாக உ ள் ள து. அஃதாவது, அருளமுதே என்னுஞ் சொற்ருெடர், புத்திர மார்க்கத்தில் ஞானசம்பந்தருக்குப் போதையார் பொற்கிண்ணத்தில் அருளம்மையார் அருள முதத்தைக் குழைத்து ஊட்டியருளிய செய்தியைக் குறிக்கும். அடுத்த நன்னிதியே என்பது சக மார்க்கத்தில் சுந்தரர், எல்லா நிதிகட்கும் நிலைக் களனகிய பொன் னுர்மேனியனைப் பாடிப் பொன் னும் பொருளும் வேண்டி நின்று பொருளும் அருளும் பெற்றதைக் குறிப்பதாக உள்ளது. அதற்கடுத்த ஞான நடத்தரசே என்னுஞ் சொற்ருெடர் தாசமார்க்கத்தில் நாவுக்கரசர், இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப் பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்று கூறி ஆண்டவன் அருள்பெற்றதைக் குறிக்கும். கடைசியாக என்னுரிமை நாயகனே என்பது சன்மார்க்கத்தில் மாணிக்கவாசகர் சிவன் திரள் தோள் கூடுவேன் என்று கூறியும், நாத என்றரற்றியும் அவனது நாயகியாக நின்று பேசி ஆண்டவனது மெய்யருளே ப் பெற்றதைக் குறிக்கும். இவ்வாறெல்லாம் அறிவுறுத்தி ஆண்டவன் அருளைப் பெறுவதற்கு மக்களையெல்லாம் கூவி