பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 "தோள் கண்டார் தோளே கண்டார்; 'தொடு கழல் கமலம் அன்ன 'த்ாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே." 19-உலாவியற் படலம்- میر با "ஐயோ இவன் அழகென்பதோர் அழியா அழகுடையான்' என்றெல்லாம் இராமரின் அழகும் சில பாடல்களில் சீதையின் அழகும் புனையப்பட்டுள்ளன. இந்த அழகினும் சுந்தர காண்டத்தில் யாருக்கு என்ன அழகு சொல்லப்பட்டுள்ளது! பாடல்களின் இனிமைச் சுவையால் பெற்ற பெயர் எனின், கம்பரது எல்லாக்காண்டங்களுமே இனிமைச் சுவை உடை யனவே! ஏதேனும் ஒரு பெயர் வைக்கவேண்டுமே என்பதற் காகப் பொதுவாகச் சுந்தர காண்டம் என்னும் பெயர் வைக்கப்பட்டதாகக் கூறவும் முடியாது. பின், பெயர்க் காரணம் யாதாயிருக்கலாம்? அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் ஒன்று உண்டு; இக்காண்டம் முழுவதும் அனுமனின் திருவிளையாடல்களே கூறப்படுதலின், சுந்தர காண்டம் என்னும் பெயர் வைக்கப் பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். இப்பெயர்க் காரணத்தைப் பலரும் உறுதியாக ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. சுந்தரன் என்று குறிக்கப்பெறும் அனுமனின் பெயர் பற்றியே காண்டப் பெயரும் தரப்பட்டது-என்னும் கொள்கை உண்மையாயின், அதுவே பொருத்தமானதாகத் தெரியும். ஏனெனில், சுந்தர காண்டத்தின் முதல் படலத் திலிருந்து இறுதிப்படலம் வரையும் அனுமனின் செயல்களே பேசப்பட்டுள்ளன. எனவே, செயல் நிகழ்த்தியவர்