பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாடும், தம்பி அக்ககுமாரன் இறந்ததுவும் பிறவும் எல்லாம், மனிதர் இருவராலும் குரங்கு ஒன்றினாலும் நேர்ந்தன. எனில், அம்மாடி! எனது வீரம் மிகவும் அழகாயிருக்கிறது. என்று கூறித் தன்னைத் தானே புகழ்வது போல் இகழ்ந்து கொண்டு நோகிறான்: - 'கானிடை அத்தைக் குற்ற குற்றமும் கரனார் பாடும் யானுடை எம்பி வீந்த இருக்கணும் பிறவும் எல்லாம். மானிடர் இருவராலும் வானரம் ஒன்றி னாலும் ஆனதே! உளஎன் வீரம் அழகிற்றே அம்ம என்றான்' (18) இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் பெயரில் வேறொரு நூலிலிருந்து இது போன்ற நோக்காட்டை எடுத்துக் காணாமல், செய்யுள் ஒப்புமை காண்டல் என்னும் பெயரில் கம்பராமாயணத்திலிருந்தே இது போன்ற தொரு செய்தியைக் காணலாம்: இலக்குவன் இராமனுக்குத் துணையாகக் காடு சென்றுள்ளான் என்பதை யறிந்த பரதன் தன்னை நொந்து கொள்கிறான். இராமனின் தம்பியருள் யான் முடிவு இல்லாத துன்பத்திற்குக் காரணம் ஆனேன்; இலக்குவனோ இராமனது துயரைத் துடைக்கச் சென்றுள் ளான் எனது அன்புக்கு அளவு உண்டோ? அண்ணனுக்கு யான் செய்யும் ஏவல்- உதவிட அடிமை மிகவும் அழகுஎன்று கூறி வருந்துகிறான்: "என்பத்தைக் கேட்ட மைந்தன், இராமனுக்கு இளையர் என்று முன் பொத்த தோற்றத்தேமில், யான் என்றும் முடிவிலாத துன்பத்துக்கு ஏது ஆனேன்; அவனது துடைக்க - நின்றான்; அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான்' (கங்கை காண் படலம்-52.j: