பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 -மொத்தமான கயிறானாலும் அனுமன் அறுத்து எறிந்து விடுவானே. அதனால், ஊஞ்சல் கயிறுகள், தேர் கட்டி இழுக்கும் கயிறுகள், குதிரைகளைக் கட்டும் கயிறுகள், யானைகளின் காலிலும் கழுத்திலும் கட்டும் கயிறுகள் ஆகியவற்றையும் பயன்படுத்தினார்களாம். அம்மட்டுமா! நாட்டிலுள்ளநகரத்தில் உள்ள கயிறுகளையெல்லாம் கொண்டு வந்து கட்டினார்களாம். அதாவது, கயிற்றுக் கடைகளில் உள்ள கயிறுகள், கயிறு திரித்து முறிக்கி உண்டாக்குகின்றஉற்பத்தி செய்கின்ற தொழிற் சாலைகளில் உள்ள கயிறு கள்- முதலியனவும் அனுமனைக் கட்டப் பயன் பட்டனவாம். அவ்வளவு"ஏன்? பெண்களின் கழுத்துகளில் உள்ள தாலிக் கயிறுகள் தவிர, மற்ற கயிறுகள் அனைத்தையும் பயன்படுத்திக் கட்டி அனுமனை இழுத்துக் கொண்டு போனார்களாம். பிணி வீட்டு படலம்: 'நாட்டில் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே வீட்டின் ஊசல் நெடும்பாசம் அற்ற, தேரும் - விசி துறந்த; மாட்டும் புரவி ஆயமெலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த; பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை: (114) "பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே - இடை பிழைத்த; கண்ணில் கண்ட வன்பாசம் எல்லாம் இட்டுக் கடடினார். (1.15) நாட்டில்- நகரில் நடு உள்ள கயிறு’ என்பதில் கடைகளில் உள்ள கயிறுகள், உற்பத்திச் சாலையில் உள்ள கயிறுகள் முதலியன அடங்கும். பெண்களின் தாலிக் கயிறு