பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நாங்கள் தெளிவாக உணர்ந்தறிந்து கொண்டோம்-என்று வானரர் கூறினர் : . 'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை உரைசெய, ஊர்தீ யிட்டது ஓங்கிரும் 影 புகையே ஒத, கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்டத் தெரிதர உணர்ந்தேம்; பின்னர் என்னினிச் செய்தும் என்றார்” (10). என்பது பாடல். இப்பாடலில் கம்பர், சொல்ல-உரைசெய -ஒத-காட்ட- அமைந்திருக்கும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கன. இந்தக் கற்பனை ஒரு புதுமுறை யல்லவா? அனுமன் வானரர்களோடு ஒரளவு நேரம் கழித்த பின்னர் இராமனை அடைந்தான். அனுமனைக் கண்ட இராமன், அனுமன் தன்னைத் தொழுது வணங்குவான் எனவும், உடனடியாகச் சீதையைப் பற்றிய செய்தியைச் சொல்லுவான் எனவும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், சொல்லின் செல்வனாகிய அனுமன் சொன்னானாஅல்லது-ஒன்றும் சொல்ல வில்லையா? அனுமன் இராமனை அடைந்ததும் தொழவே இல்லை; ஒன்றும் சொல்லவேயில்லை. அனுமன் தன் முதுகுப் பக்கத்தை இராமன் காணுமாறு திருப்பிக் கொண்டான்;. சீதை இருந்த தென் திசையை நோக்கி முகத்தை வைத்துக் கொண்டான்; தன் இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து வைத்துக்கொண்டான்; இராமன் பக்கம் கால்களை நீட்டிக்கொண்டும் சீதை இருக்கும்பக்கம் தலையை வைத்துக் கொண்டும் நெடுஞ் சாண் கிடையாய்க் கீழே விழுந்து தரையைத் தழுவிப் படுத்துக் கொண்டு வணங்கியபடியே. சீதையைப் போற்றிப்புகழ்ந்து வணங்கியபடியே வாழ்த்திக் கொண்டிருந்தான்.