பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 அனுமனின் செயல்களைக் கண்ட இராமன், சீதை தென் திசையில் உள்ள இலங்கையில் இருக்கிறாள்அவளை அனுமன் கண்டு வந்திருக்கிறான-பழிப்புக்கு இட மின்றி அவள் நல்ல கற்பு நெறியில் உள்ளாள்-என்று குறிப்பால் அறிந்து கொண்டான். இச் செய்திகளைச் சொல்லின் செல்வனாகிய அனுமன் ஒரு சொல்லும் சொல் லாமல் சொல்லித் தெரிய வைத்து விட்டான். இராமனும் ஒரளவு ஆறுதல் பெற்றான். இந்த நிகழ்ச்சிகளைப் பின் வரும் பாடல்களால் அறியலாம்: . "எய்தினன் அனுமனும், எய்தி ஏந்தல்தன் மொய்கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையின் கையினன் வையகம் தழிஇ நெடிதிறைஞ்சி வாழ்த்தினான்’ (22) 'தின் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்; வண் திறல் ஒதியும் வலியள்; மற்றிவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்றெனாக் கொண்டனன் குறிப்பினால் உணரும் . கொள்கையான்' (23). அனுமன் இப்படியெல்லாமா நடந்து கொண்டிருப் பான்? இங்கே கம்பர் தம்கைவண்ணம் காட்டிக் கற்பவரைக் களிக்கச் செய்துள்ளார். அனுமனைக் காணுவதற்கு முன், இராமன், சீதை. கிடைப்பாளோ-மாட்டாளோ-என்று செத்துச் செத்துப் பிழைத்தானாம். இவ்வாறு பலமுறை செத்துச் செத்துப் பிழைப்பதற்கு இராமன் ஆயிரம் உயிர்கள் உடையவனாய் இருந்திருப்பானோ? ஒர் உயிர் செத்ததும் பின்பு மற்றோர். உயிராய்ப் பிறப்பதும், அது செத்ததும் வேறோர் உயிரால் பிழைப்பதுமாகச் செய்வதற்கு ஆயிரம் உயிர்களா. இருந்தன?