பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 'ஆருயிர் ஆயிரம் உடைய னாம்எனா சோர்தொறும் சோர்தொறும் உயிர்த்துத் தோன்றினான்’ (14) இஃதும் சுவைக்கத்தக்க புதிய வெளியீடு! இராமனை மகிழ்விக்க அனுமன் வெளிபபடையாகவே அறிவிக்கத் தொடங்கி விட்டான். என்னவென்று அறிவித் தான்? ஐயனே! இங்கிருந்து இலங்கைக்குத் தாவிச் சென் றேன்.-என்னைப் பலர் எதிர்த்தனர்-நான் அவனைக் கொன்றேன்.இவனைக் கொன்றேன்-என இராமாயணமா வளர்த்திக் கொண்டு போனான்? இல்லையில்லை. எடுத்த எடுப்பிலேயே, கண்டு விட்டேன்' என்றான். எதை? கற்புக்கு அணிகலமாவதை. யாராவது சீதை இருக்கிறாள் இலங்கையில் என்று சொல்லக் கேட்டறிந்தேனா-இல்லை யில்லை-என் இரு கண்களால் நேரில் கண்டனன் என் கிறான். 'கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்' - (25) என்பது பாடல் பகுதி. இங்கே சீதை என்று குறிப்பிடாமல் "கற்பினுக்கு அணி' என்று உயர்த்திக் காட்டுகிறான். அனுமன் மேலும்கூறுகிறான்: ஐயனே! இல்லையில்லை யான் இலங்கையில் சீதையைக் காணவில்லை; ஒரு நடனத்தைக் கண்டேன்; மூன்று (பண்புகள்) சேர்ந்து கொண்டு குழு நடம் புரிந்தன. அதாவது, உயர் குடிப் பிறப்பு என்ற ஒன்றும், பொறுக்கும் உயர் பண்பு என்ற ஒன்றும், கற்பு என்ற ஒன்றும் களி நடம்- ஆனந்தநடனம் ஆடக்கண்டே ன்' என்று. 'விற்பெருந் தடந்தோள் வீர! iங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்