பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சோகத்தாள் ஆய நங்கைகற்பினால் தொழுதற்கு ஒத்த மாகத்தார் தேவி மாரும் வான் சிறப்பு உற்றார்; மறறைய 'பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள்; - பதுமத்தாளும் ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மெளலி ^. மேலாள். (34) உமை சிவன் தலைமேலும் திருமகள் திருமால் தலை மேலும் ஏறிக்கொண்டார்கள் என்பதன் கருத்து என்ன? சிவனும் திருமாலும் மனைவியரைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டனர் என்பது கருத்து. அவர் அவனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டார் என்னும் உலக வழக்காற்றின் கருத்து என்ன? உண்மையில் தலைமேலா அவன் ஏறி அமர்ந்து கொண்டான்? இல்லை. அவன் மிகவும் உயர்ந்துவிட்டான் என்பது கருத்து, அதுவேதான் இங்கும்! திருமாலுக்கு ஆயிரம் முடிகள் இருப்பதாகச் சொல்வர். திருமகள். ஆயிரம் மடங்கு உயர்ந்து விட்டாள் என்ற பொருள்நயம் இங்கே சுவைக்கத்தக்கது. . அனுமன் மேலும் இராமனிடம் கூறுகிறான்: நான் சீதையினிடத்தில் ஒரு நேரத்திற்குள்ளேயே இருவித நிலை களைக் கண்டேன். நீ தந்த கணையாழியை அவளிடம் தந்ததும், அதை அவள் தன் முலைமேல் வைத்தாள்; பிரிவுத் துன்ப வெப்பத்தினால் அக்கணையாழி உருகி விட்டது. பின் அவள் மனத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக் குளிர்ச்சியினால், உருகி நீர்மைப்பட்டிருந்த கணையாழி குளிர்ந்து கட்டிப் பொருளாகிவிட்டது-என்கிறான்? "ஒரு கணத்து இரண்டு கண்டேன். ஒளி மணி ஆழி ஆன்ற திருமுலைத் தடத்து வைத்தார்; வைத்தலும் செல்வ . நின்பால்