பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 விரகம் என்பதனின் வந்த வெங்கொழுந் தீயினால் வெந்து . &ހ உருகியது; உட்னே ஆறி வலித்தது குளிர்ப்பு உள்ஊற.' (42) இந்த இரண்டும் ஒரு நொடியில் நடந்தனவாம். இங்கே. உலகியல் நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. பொற் கொல்லர்கள் உலை நெருப்பில் இட்டுப் பொன்னை உருகச் செய்து தூய்மை உண்டாக்குவார்கள்; பின் உடனே தண்ணிரில் எடுத்துப் போட்டுக் குளிர்ச்சியடையச் செய்வார் கள். இங்கே பொன் கணையாழிக்கும் இந்த நிலை ஏற்பட்டது. அனுமன் மேலும் கூறுகிறான்: நான் தந்த கணை யாழியைச் சீதை பெற்றதும், ஐயோ, இது வஞ்சகரின் ஊருக்கு வந்து விட்டதே என்றெண்ணி, ஆயிரம் குடத்து நீரால் முழுக்காட்டியது போல், தன் கண்களினின்றும் வந்த நீர் மழையில் அதை முழுக்காட்டினாள், மனம் ஏங்கினாளே தவிர ஒன்றும் வாய் பேசவில்லை; மகிழ்ச்சி யால் உடல் பூரித்தாள்; வியந்தாள்; கண்ணை இமைக்காமல் -திறந்து மூடாமல்-வாங்கிய கண் வாங்காதபடி அதையே உற்றுப் பார் த் து க் கொண்டிருந்தாள்; பெருமூச் செறிந்தாள்: 'வாங்கிய ஆழி தன்னை வஞ்சகர் ஊர் வந்ததாம் என்று ஆங்குயர் மழைக் கண்ணிரால் ஆயிரம் கலசம் ஆட்டி ஏங்கினள் இருந்த தல்லால், இயம்பலள் எய்த்த மேனி வீங்கினள்; வியந்த தல்லால் இமைத்திலள் உயிர்ப்பு . விண்டாள்.” (43)