பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஆற்றியிருத்தல் வேண்டுமெனக் கூறுதற் கண்ணும்' என்பது இளம் பூரணர் உரைப் பகுதி. இங்கே, மானம் என்பதற்குக் குற்றம் என்றே அவர் பொருள் கூறியுள்ளார். ஆனால், நச்சினார்க்கினியர் இதன் உரையில் மானம் என்பதற்குப் பெருமை என்று பொருள் கூறியுள்ளார்; இவரது உரைப் பகுதி வருமாறு: 'தமக்கேற்ற புகழும் பெருமையும் எடுத்துக் காட்டி இதனாற் பிரிதுமெனத் தலைவியையும் தோழியையும் வற்புறுத்தற் கண்ணும்' என நச்சினார்க்கினியர் மானம் என்பதற்குப் பெருமை என்னும் பொருள் கூறியிருப்பதையறியலாம். தொல்காப்பியர் மிகப் பல இடங்களில் மானம் என்னும் சொல்லைக் குற்றம் என்னும் பொருளிலேயே ஆண்டிருப்பதால், அவ்வாறே இளம்பூரணர் கூறியிருக்கும் பொருளே பொருத்தமானது. பெருமை என நச்சினார்க் கினியர் கூறியிருப்பது தவறாகும். ஒருவேளை, பெருமை என்னும் பொருளில் மானம் என்னும் சொல்லை இங்கே தொல்காப்பியர் பயன்படுத்தியிருப்பராயின் அவரும் குற்றம் உடையவரேயாவார். எனவே, மானம் என்னும் சொல், முற்காலத்தில் குற்றம் என்னும் வடதுருவத்தையும், பிற்காலத்தில் பெருமை என்னும் தென் துருவத்தையும் குறிக்கலாயிற்று. என்பதை உணரலாம். வடதுருவம் தென் துருவமாகிய மாறியது எப்படி-எப். போது: மாறிய வரலாறு யாது? பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் சில, வடதுருவத் தையும் தென் துருவத்தையும் இணைக்க முயன்றுள்ளன. அதாவது, உயர் நிலையிலிருந்து தாழ்ந்துவிடின் உயிர் வாழாமை' என்னும் பொருளில் மானம் என்னும் சொல்லை. ஆண்டுள்ளன. -