பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இதே கருத்தில் இன்னு மோரிடத்தில் கம்பர் மானம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இந்திரசித்து, தன் தம்பி அக்ககுமாரனும் அரக்கர் பலரும் அனுமனால் இறந்து கிடந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல், புண் ணுக்குள் கோல் இட்டதைப் போன்ற மான உணர் வினால் புழுங்கினானாம். புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால் புழுங்குகின்றான்" (பாசப் படலம்-17). இங்கேயும், மானம் என்பது, வடதுருவத்தையும் தென் துருவத்தையும் இணைக்கும் பாலமாக உள்ள பொருளில் ஆளப்பட்டுள்ளமை காணலாம். இனி மற்றொரு குறள் ஆட்சியைக் காணலாம்: அனுமன் அரக்கர் பலரோடு முன் னிலும் மும்மடங்கு ஆற்றல் பெற்றுப் போரிட்டபோது, அவன் ஞாயிற்றின் வெயில் போலக் காணப்பட்டானாம்; இறக்கும் அரக்கர்கள், வெயிலில் துடித்துச் சாகின்ற எலும்பு இல்லாத புழுக்கள் போல் காணப்பட்டனராம்: . 'வர உற்றார், வாரா நினறார், வந்தவர், வரம்பில் வெம்போர் பொர உற்ற பொழுது, வீரன் மும்மடங்கு ஆற்றல் பொங்க விரவிப் போய்க் கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் . ஆனான்; உரவுத்தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார்’ (அக்ககுமாரன் வதைப் படலம்-27) இப்பாடலில், # ' என்பி லதனை வெயில்போலக் காயுமே - அன்பி லதனை அறம்' (77) என்னும் குறள் அடங்கியுள்ளது.