பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பர் கண்ட சிவமும் முருகும் கம்பர் சிவனைப் பற்றியும், முருகனைப் பற்றியும் சுந்தர காண்டத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். திருமாலின் ஒரு பிறவியாகிய இராமனைப் பற்றிக் கம்பர் எழுதியிருப்பதால் அவரை வைணவர் என்று பலர் கூறுவர். அவர் சிவனைப் பற்றியும் முருகனைப் பற்றியும் பல இடங் களில் குறிப்பிட்டிருப்பதால் அவரைச் சைவர் எனப் பலர் கூறுவர். நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பரின் அடக்கத் தின் (சாமாதியின்) மேல் சிவலிங்கம் வைத் திருப்பதால் அவரைச் சைவர் என்று பலர் கூறுவர். கம்பரின் அடக்கத் தின் மேல் முதலில் வைணவ அறிகுறியாகத் துளசி மாடம் இருந்தது; பின்னர் அதை நீக்கி விட்டுச் சிவ லிங்கத்தைச் சைவர்கள் வைத்து விட்டனர் என வைணவர் சிலர் கூறுகின்றனர். சைவர்களுள் சிலர் திருமால் கோயிலுக்குச் செல்வதோ- திரு மண் (நாமம்) அணிவதோ இல்லை. இவ்வாறே வைணவர் சிலர் சிவன் கோயிலுக்குச் செல்வதோ- திருநீறு அணிவதோ இல்லை. சிவன் திருமேனி ஊர்வலமாகத் தெருவில் வந்தபோது தம் விட்டுத் தெருக்கதவுகளைச் சாத்தி மூடிக் கொண்ட வைணவர் களும் இருந்தனர்.