பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இராமரே சிவனை வணங்கியதின் சான்றாக இராமே. சுரம் இருப்பதைச் சிலர் சுட்டிக் காட்டி, இராமர் வரலாற்றை எழுதியதால் கம்பரை வைணவர் என்று கூறி விட முடியாது என்பது சைவர் சிலரின் வாதம். அண்மையில் தில்லித் தொலைக் காட்சியில் (டி.வி. யில்), 'ஓம் நமசிவாய- ஓம் நமசிவாய' என்று கூறி இராமர் சிவலிங்கத்தை வழிபட்ட காட்சியையும், இராமர் தம் மனம் நொந்தபோது சிவலிங்கத்திடம் சென்று. 'பிரபோ என விளித்து வேண்டியதையும் கண்ட என் நண்பர் ஒருவர் இராமரே கூடச் சைவர்தான் என்று கூறிக் "குதி-குதி' என்று குதித்தார். மேற் கூறியவற்றின் அடிப்படையில் நோக்குங்கால், கம்பருக்குச் சைவம்-வைணவம் என்ற பாகுபாடு கிடை யாது; அவர் இரண்டிற்கும் பொதுவானவர்-இரண்டையும் ஏற்றுக் கொண்டவர் என்று திடமாகத் தீர்ப்பு வழங்கலாம். சைவர்கள் இராமாயணம் படிக்கக்கூடாது என்று. முதியவர் ஒருவர் என்னிடம் கூறிய நினைவு உள்ளது. கம்பரே தம் இராமாயண நூலில் சிவனைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதால், மறந்தும் புறம் தொழார்' என்பது கம்பருக்குப் பொருந்தாது என்பதை நிலைநாட்டக் கம்பர் சிவனைப் பற்றிக் கூறியிருக்கும். பகுதிகள் சிலவற்றை ஈண்டு காண்போம்: கழுத்தில் நீலக் கறையுடைய சிவன், யானைத்தோலை, உரித்தான் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. 'கண்டத்திடைக் கறையுடைக் கடவுள் கைம்மா முண்டத்து உரித்த உரியால்...' (கடல் தாவு படலம்-65)