பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116. தடுத்தும் அவன் உள் செல முயன்றான். அப்போது அவள், திரும்பிப் போகாமல் எதிர்ப் பேச்சு பேசும் நீ யாரடா, முப்புரம் எரித்த சிவனை ஒத்தவர்களும் இந்நகர்க்குள் புக அஞ்சுவர்; நீ புக முடியுமா? என்றாளாம், 'என்னா முன்னம் ஏகுஎன ஏகாது எதிர்மாற்றம் சொன்னாயே நீ யாவன் அடா! தொல்புரம் அட்டான் அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் உன்னால் எய்தும் ஊர்கொல் இவ்வூர் என்றுற நக்கரள்' (82) 'அன்னாரேனும் என்பதில் உள்ள உம்மை சிவனது உயர்வை அறிவிக்கும் உயர்வு சிறப்பு உம்மையாகும். பின் அனுமன் நான் புக்கே தீர்வேன் என ஏளனச் சிரிப்பு சிரித்தான். கண்ட இலங்கைமாதேவி, இவன் குரங்கு அல்லன்-யாரோ ஒரு வஞ்சகன் இவன்; என்னை எமன் கண்டாலும் அஞ்சிச் சோர்வான்; ஆனால் இவனோ, நஞ்சுண்ட சிவன் போல் நகுகின்றான்-என வியந்து எண்ணுகின்றாள். . 'வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன்; வருகாலன் துஞ்சும் கண்டால் என்னை; இவன் சூழ்திரை ஆழி நஞ்சங் கொண்ட கண்ணுதலைப் போல் நகுகின்றான்; நெஞ்சம் கண்டே கல்என நின்றே நினைகின்றான்.' (84) இங்கே சிவன் மிக உயர்ந்தவன் என்னும் குறிப்புக் கிடைக்கிறது மற்றும், சிவன் சிரித்தே முப்புரத்தை எரித் தான்; அவனைப் போல் அனுமன் சிரித்தானாம். வீடணனது மாளிகையில் யாரும் அறியாமல் புகுந்த அனுமன் உறங்கும் வீடணனது இனிய-நல்ல தோற்றத் தைக் கண்டு வியக்கிறான். முக்கண் உடைய சிவன் மகனாகிய முருகன் தன் ஆறு முகங்களையும்