பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 பன்னிரு தோல்களையும் மறைத்துக் கொண்டிருந்தால்: எப்படியோ அப்படியாக-அம் முருகனைப் போலத் தோற்றம் அளிக்கிறான் இவன். அரக்கனாக இருப்பானோ இவன்-இல்லை-மழுப்படையுடைய சிவன் மகனாகிய முருகனாகவே இருப்பானோ? யார் எனப் புரியவில்லையே.. என அனுமன் வியக்கின்றான். 'முக்கண் நோக்கினன் முதல் மகன் அறுவகை முகமும் திக்கு நோக்கிய புயங்களும் சிலகாந் தனையான் ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப் புக்கு நோக்கினன், புகை புகாவாயிலும் புகுவான்' (138). வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ? அளையில் வாளரி அனையவன் யாவனோ அறியேன்" (139). அனுமன் புக முடியாத இடத்திலும் புகுவானாம். இங்கே முருகன், சிவனுடைய முதல் மகன் எனக் கூறி யிருப்பது ஆராய்ச்சிக்கு உரியது. மூத்த பிள்ளையார் எனப் படும் விநாயகர், பரஞ்சோதியாம் சிறுத்தொண்டரால் வாதாபியிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப் பட்டவர். இப்போதும், சேர நாடாகிய மலையாளத்தில் 'விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில்லை. மேலும் வியக்கிறான் அனுமன் : இவனைத் (வீடணனை) துணையாக உடைய இராவணன், மூன்று உலகங்களையும் வென்றது அரிய செயல் அன்று-எளிய செயலே சிவன், நான் முகன், திருமால் ஆகியவர்களைத் தவிர, வேறு யாரும் இவனுக்கு ஒப்பாக மாட்டார்.