பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 "அங்கண் ஞாலமும் விசும்பும் அஞ்சவாழ் வெங்கணாய்! புன்தொழில் விலக்க உட்கொளாய் செங்கண் மால், நான்முகன், சிவன், என்றேகொலாம் எங்கள் நாயகனையும் நினைத்தது ஏழைநீ'- (122) திருமாலே இராமர் என்ற குறிப்பைப் பல இடங்களில் தந்துள்ள கம்பரே, இங்கே திருமாலினின்றும் இராமரைப் பிரித்துக் காட்டியுள்ளார். இராவணனுக்குச் சீதை தன் கணவரின் பெருமையைக் கூறும்போது இப்படித்தான் கூற முடியும் என்று கொண்டு காப்பியத்திற்குச் சுவை ஊட்டியுள்ளார். t இந்தப் பெரிய செல்வ வன்மையைச் சிவன் உனக்குத் தந்தது உன் தவத்தினால் அல்லவா? நீ தவநெறி பிறழ்ந்து செல்வமும் உறவினரும் அழியும்படி அறத்தினின்றும் வழுவுகின்றாய். இனி அறநெறியை விரும்புவாயாக! 'இப்பெருஞ் செல்வம் நின்கண் ஈந்தபேர் ஈசன் யாண்டும் அப்பெருஞ் செல்வம் துய்ப்பான் நின்றுமா தவத்தின் அன்றே? ஒப்பருந் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி தப்புதி அறத்தை; ஏழாய்! தருமத்தைக் காமியாயோ?? r (127) ஏழாய்-ஏழையே என்பது, இராவணன் எல்லாம் துறந்த ஏழையாவான் என்ற குறிப்பை அறிவிக்கிறது. அனுமன் இராமனது நிலையைச் சீதைக்கு அறிவிக் கிறான். இராமன் மன மயக்கம் கொண்டு புலன்கள் நிலை தடுமாறி, பாம்பு சூடிய சிவன் போல் பித்தன் ஆனான் விதியை யாரே வென்று கடக்கவல்லார்? என்றான்.