பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 "கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே காடப்பார்? பொன்மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் நன்மத்தம் நாகத் தயல் சூடிய நம்பனேபோல் உன்மத்தன் ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலா தான் (உருக் காட்டு படலம்-84) இராமன் சிவன் போல் பித்தன் ஆனானாம். சிவனைப் சபித்தா” எனச்சுந்தரரே அழைத்துள்ளார். சிவனைப் பித்தனாக இப்பாடலில் கூறியிருப்பதில் ஒரு புராணக் கதை புகுந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது. சிவன் பிரமனின் ஒரு தலையைக் கிள்ளினானாம். பிரமன் அந்தணனாதலின், அவனது தலையைக் கிள்ளியதால் சிவனைப் பிரமசத்தி பிடித்துக் கொண்டதாம். அதனால் சிவன் பித்தன் போல் திரிந்தானாம். பின்னர்ச் சிவனது சாபப் பிழையைத் திருமால் தீர்த்தாராம். தஞ்சாவூருக்கும் திருவையாற்றிற்கும் இடையே கண்டியூர் என்னும் ஊர் உள்ளது. அங்கே சிவன் கோயிலும் உள்ளது- திருமால் கோயிலும் உள்ளது. அவ்வூர்த் திருமால் சிவன் சாபத்தைத் தீர்த்தவராம்; அதனால் அவ்வூர்த் திருமால் கோயில் "அரன் சாபம் தீர்த்த பெருமாள் கோயில் எனப்படுகிறது. இந்தக் கதையின் அடிப்படையில் சிவனைப் பித்தன் என்று கூறியிருக்கலாம். ஆனால், சைவர்கள் இந்தக் கதையை ஒத்துக் கொள்வதில்லை. அனுமன் அசோகவனத்தை அழித்து ஒரு தனியனாக நின்றானாம். உலகம் அழியும் இறுதி ஊழிக்காலத்தில ஒரு தனியனாக இருக்கும் சிவனைப்போல அனுமன் தோன் தினானாம்: -