பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 "தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான்....... ஊழியின் இறுதிக் காலத்து உருத்திர மூர்த்தி ஒத்தான்.' (பொழில் இறுத்த படலம்-46) உருத்திர மூர்த்தி என்பது சிவனை-இப்பாடலால், சிவனது முதன்மைத் தலைமை புலனாகலாம். அனுமன் தன்னொடு போர் செய்த எமன் போன்ற அரக்கர்களைச் சிவன் (உருத்திரன்) போல் எழுந்து, தனித்தனியாகக் காலால் உதைத்தானாம். மறுத்தெழு மறலிகள் இவர் என அதிர்ந்தார்; ஒறுத்து உருத்திரன் எனத் தனித்தனி உதைத்தான்.' (சம்புமாலி வதைப் படலம்-38) மார்க்கண்டேயனுக்காக எமனைச் சிவன் உதைத்தது போல அனுமன் அரக்கர்களை உதைத் தானம், பஞ்சசேனாபதிகளாம் அரக்கர்கள், சிவனது சூலப் படை தைத்தாலும் ஊசி குத்தியது போலவே தெரியக் கூடிய திண்ணிய தோளை உடையவர்களாம். "ஈசன் வன்தனிச் சூலமும் என்றிவை ஒன்றும் ஊசி போழ்வ தோர் வடுச் செயா நெடும் புயம் . உடையார்” (பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்-16). சூரனைக் கொன்ற முருகனது ஊர்தி மயில் என்பது. குறிப்பிடப்பட்டுள்ளது; . 'சூர் தடிந்தவன்மயிலிடைப் பறித்தவன் தோகை.-'(17) முழுமுதல் கடவுளும் நெற்றிக் கண் உடையவனும் முருகன் தந்தையும் ஆகிய சிவனது மழுப்படையைப்