பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 போன்ற எழுவால் (இரும்புத்தடியால்) அனுமன் அரக்கரை நொறுக்கினான்: 'முழுமுதல் கண்ணுதல் முருகன் தாதை கைம் மழு எனப் பொலிந்தொளிர் வயிரவாள் தனி எழுவினின் பொலங்கழல் அரக்கர் ஈண்டிய குழுவினைக் களம்படக் கொன்று நீக்கினான்'- (45) இப்பாடலில் சிவன் முற்றிலும் முதல் கடவுள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது எண்ணத்தக்கது. அக்ககுமாரன் வதைப் படலம்-இரண்டாம் பாட்டில் முக்கணான் ஊர்தி அன்றேல்'-எனச் சிவனது ஊர்தி (காளை) குறிப்பிடப்பட்டுள்ளது. அக்ககுமாரன் தன் தந்தை இராவணனிடம், குரங்கு உருவில் வந்து இங்கே கொடுமை செய்பவன் முக்கண் சிவனே யாயினும் அவனை எளிதில் வென்று பிடித்துக் கொண்டு வந்து உன்னிடம் தருவேன்-என்று கூறு கின்றான்: - 'கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு கைதவம் கண்ணி ஈண்டோர் சிறுபழி இழைக்கும் கற்பான் எய்தினன் இமையா முக்கண் ஈசனே என்ற போதும் நொய்தினின் வென்று பற்றித் தருகு வென் நொடியில் நுன்பால்' (4) ஈசனே என்ற போதும் = உம்மை ஈசனது உயர்வைச் சிறப்பிக்கும் உயர்வு சிறப்பு உம்மை. அக்ககுமாரனைக் கண்ட அனுமன், இவன் பல தலைகளையுடைய இ | வ ண னாகவும் தெரியவில்லை. ஆயிரம் கண்ணனாகிய இந்திரனை வென்ற இந்திரசித்தாகவும் தோன்றவில்லை;