பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அவர்கட்கெல்லாம் மேலானவனாகிய முருகனாகவும் புலப் படவில்லை; இவன் யாராக இருப்பானோ? என்று ஐயுறு: கின்றான்: - "பழி இலது உரு என்றாலும் பல்தலை அரக்கன் அல்லன்; விழிகள். ஆயிரமும் கொண்ட - வேந்தை வென்றானும் அல்லன்; மொழியின் மற்றவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன்; அழிவில் ஒண்குமரன் யாரோ அஞ்சனக் குன்றம் அன்னான்.' (20) இப்பாடலில் முருகனது பெருமை மொழியப் பெற். இறுள்ளது. (பாசப் படலம்) பின்பு, தம்பி இறந்ததை அறிந்த இந்திரசித்து, முப் புரங்களை அழிக்க.வில்வளைத்த பரஞ் சுடராகிய சிவனைப் போல் வெகுண்டெழுந்தான். 'அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் உரம் சுடஎரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான்; புரம் சுட வரி சிலைப் பொருப்பு வாங்கிய பரஞ்சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான்.'(2): பரஞ்சடர் என்பது, சிவன் பரம்பொருள் என்பதை, உணர்த்துகின்றது. . இந்திரசித்து இராவணனுக்கு அறிவுரை தருகிறான், தந்தையே! போருக்குச் சென்ற நம் படை மறவரும் திரும்ப வில்லை. அவர்களைக் கொன்ற அந்தக் குரங்கு, சிவனோ, நான் முகனோ, திருமாலோ என்று கூறமுடியவில்லை. எட்டுத் திக்கு யானைகளையும் முப்புரம் எரித்த சிவனது