பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 கயிலையையும் மூவுலகையும் நீ வென்றாய்! இக்குரங்கை எவ்வாறு வெல்வது என் றல்லாம் கூறுகின்றான்: 'இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல், - குரங்கு அது எந்தாய், சங்கரன் அயன் மால் என்பார் தாம்எனும் தகைய தாமோ!' (10) 'திக்கய வலியும் மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணன் கயிலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்...”(11) போருக்கு வந்த இந்திரசித்தை, அனுமன், முப்புரம் எரித்த சிவனைப் போல் நோக்கினானாம்? 'மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின் ஆண்தகை வனைகழல் அனுமன் நோக்கினான்: (23) கயிலைச் சிவனே, சீதையின் கற்பின் பெருமையால் இலங்கையை அழிக்கக் குரங்கு உருவில் வந்து ளானோ என அரக்கர்கள் பேசிக் கொண்டனர். (பிணி வீட்டுப் படலம்) கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன் மயிலியல் சீதை தன் கற்பின் மாட்சியால் எயிலுடைத் திருநகர் சிதைப்ப எய்தினன் அயில் எயிற்று ஒரு குரங்காய் என்பார் பலர். (15) 'தள் இல் முக்கணான் கணிச்சி (38) என ஒரு பாடலில் சிவனது படை குறிக்கப்பட்டுள்ளது. இராவணன் அனுமனை நோக்கி, நீ, உயிர் கவரும் எமனோ? தாருகனின் இரவுஞ்ச மலையை அழித்த முருகனோ? நீயார்? என வினவுகிறான்: 'நின்றசைத்து உயிர்கவர் நீலக் காலனோ குன்றிசைத் தயிலுற எறிந்த கொற்றனோ? (66)