பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 என்பது பாடல் பகுதி. யார் எனக் கேட்ட இராவணனுக்கு, அனுமன், இராமனின் பெருமையை அறிவிக்கின்றான். இராமன், தேவரும் அல்லன்-திக்குக் காவலரும் அல்லன்கயிலை ஈசனும் அல்லன்-என்றெல்லாம் கூறுகின்றான். தேவரும் பிறரும் அல்லன்; திசைக்களிறு அல்லன்; திக்கின் காவலர் அல்லன், ஈசன் கயிலையங் கிரியும் அல்லன்..."(72) - மூன்று தலைகளை (நுனிகளை) உடைய சூலப் படையை உடைய சிவன் என்னும் பொருளில் முத்தலை எஃகன்' எனச் சிவன் ஒரு (110) பாடலில் கூறப் பட்டுள்ளான். - அனுமன் இலங்கையை எரியூட்டத் தன் வாலை நீட்டி னான். அனுமன் இலங்கையை எரித்த அளவுக்கு நாம் முப்புரத்தை எரிக்கவில்லையே எனச் சிவன் நாணும்படி மிக்க ஆற்றல் காட்டினானாம் அனுமன்: "துன்னலர் புரத்தை முற்றும் சுடுதொழில் தொல்லையோனும் பன்னின பொருளும் நாண.......வாலினைப் போகவிட்டான்' (130) இங்கே சிவன் 'தொல்லையேன்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளான். தொல்லையோன் என்பதற்குப் பழமை யானவன் என்பது பொருள். இது சிவனது முதன்மையை அறிவிக்கிறது. ஈண்டு. முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே’’ என்னும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல் (திருவெம்பாவை-9:1) பகுதி ஒப்பு நோக்கத்தக்கது. அரக்கர்கள் தீ மூட்டி நெய்பெய்து வேள்வி செய்யாத தால், தீக்கடவுள் (அக்கினி பகவான்) நெடுநாளாய்ப் பசித் திருந்தானாம். இப்போது அவனது பசி போகும்படி அனுமன் இலங்கை முழுவதையும் எரியுண்ணச் செய்