பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 தானாம். இதற்கு ஒர் உவமை கூறப்பட்டுள்ளது. இறுதி யில் உலகெல்லாம் அழியும்படி சிவன் எரியூட்டும் ஊழிக் காலம் போல் எரியுண்ணப் பட்டதாம். 'நீல்நிற நிருதர் யாண்டும் நெய்பொழி வேள்வி நீக்க, பால்வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி, ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகெலாம் அழிவின் உண்ணும் காலமே என்ன மன்னோ கனலியும் கடிதின் உண்டான்' (133) இப்பாடலாலும் சிவனது முதன்மைத் தன்மை புலப் படும். - அனுமன், சூலப் படையுடைய சிவனாலும் முடிக்க முடியாத செயல்கள் செய்து மீண்டானாம்: 'முத்தலை எஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம் முற்றி வித்தகன் தூது மீண்டது......' (திருவடி தொழுத படலம்...13) 'முத்தலை எஃகி னாற்கும்’ என்னும் உம்மை, சிவனது உயர்வை விளக்கும் உயர்வு சிறப்பு உம்மையாகும். இவ்வாறாக, சுந்தர காண்டத்தில், சிவன் பல இடங் களிலும், முருகன் சில இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள னர். வைணவரே இராமாயணம் படிக்க வேண்டும்சைவர்கள் படிக்கலாகாது என்று சொன்னவர், தம் கொள்கையை மறு ஆய்வு செய்யவேண்டும்; கம்பர் வைணவர் மட்டும் அல்லர் - சைவரும் ஆவார்- அவ்வளவு ஏன்? கம்பர் சமயப் பொதுவுடைமையாளர் என்பதையும் உணரவேண்டும். இத்தகு மாபெருஞ் சான்றாகச் சுந்தர காண்டத்தி லிருந்து ஒரு பாடலைக் காண்போம் : அனுமன் இராவண னுக்கு இராமனைப் பற்றிக் கூறுகிறான்: நாம் இராம