பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 'அன்றியும் பிறிதுள்ள தென்று; ஆரியன் வென்றி வெஞ்சிலை மாசுனும்...' (14) 20. இராமர் வந்து இலங்கையை அழிக்காமல், யான் அனுமனுடன் சென்று விடின், இல் பிறப்பின் பெருமையை வும் நல்லொழுக்கத்தையும் மாசற்ற தூயகற்பையும் பிறர்க்கு எவ்வாறு உணர்த்துவேன் என்று சீதை கூறியமை பொன்பிறங்கல் இலங்கை பொருந்தலர் என்பு மால்வரை ஆகிலதே எனின், இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் கற்பும் யான் பிறர்க்கு எங்ங்ணம் காட்டுகேன்?’ (17) 21. அனுமனே! நீ ஐம்பொறி யுணர்வை அடக்கியவன் எனினும், நீ ஆடவன் ஆதலால், உன்னொடு வருதல் சரி யன்று என் கணவர் உடலைத் தவிர வேறு ஆடவரின் உடலைத் தீண்டமாட்டேன்-எனச் சீதை கூறியமை: வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் ஏறு சேவகன் மேனியல்லால் இடை ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறும் இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?" (19) 22. சீதை தான் அமர்ந்த இடம் செல்லரிக்கும்படி அசோகவனத்தில் ஒரே இடத்தில் இருந்தாள். இலக்குவன் காட்டிய சிறு குடிலோடு இராவணனன் எடுத்து வந்ததால், அசோகவனத்திலும் அந்தக் குடிலிலேயே இதோ இருக் கிறேன் பார் என்று அனுமனிடம் கூறினாள்: 'இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டு எழாதாள்' (காட்சிப்படலம்-15)