பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 8. இராவணனின் இளைய மகன் அக்ககுமாரன் என்பவன் தந்தையை வேண்டிப் படையுடன் வந்தான். அனுமன் கண்டு வியந்தான். அக்ககுமாரன் எள்ளி நகையாடிச் சிரித்தான். அரக்க வீரர்களை அனுமன் வென்றான்; அக்ககுமாரனின் தேரையும் படைகளையும் அழித்தான். பின் அக்ககுமாரன் அனுமனோடு மற்போர் புரிந்து மடிந்தான். உயிர் தப்பியவர்கள் ஒட்டம் பிடித் தனர். 9. இறுதியாக, இராவணனனின் முதல் மகனாகிய இந்திரசித்து பெரும்படையுடன் வந்து அனுமனுடன் பொருதான். அனுமன் அவனை எழுவால் அடித்து வலிமை இழக்கச் செய்தான். இந்திரசித்து வானில் திரிந்தான். பின் வேறு வழியின்றி, நான்முகன் நல்கிய பாம்புப் படையை (நாக பாசத்தை) விட்டான். அனுமன் அதற்கு மதிப்பு அளித்துக் கட்டுப்பட்டவனாய் இராவணனிடம் அழைத்துச் செல்லப்பட்டான். - 10. இறுதியில் அனுமன் இலங்கையின் பெரும் பகுதியை எரியூட்டி அழித்தான். பிடித்து வருமாறு இராவணன் அரக்கர் எழுவரை அனுப்பினான். அவர்கள் தலைமையில் அரக்கர்கள் பலர் வந்து பொருதனர். அனுமன் அனைவரையும் அழித்தான். பின் சீதையை வணங்கிக் கடல் தாவி மீண்டான். இந் நிகழ்ச்சிகளால் அனுமனின் பேராற்றல் பெரிது புலப்படுகின்றதன்றோ! 2. இரக்க குணம் அனுமன் பேராண்மையோடு (வீரத்தோடு) ஊராண்மை யும் (உதவி செய்யும் இரக்க குணமும்) ஆஉடையவனாகத் திகழ்ந்தான். திருவள்ளுவர், படை மறவர்கட்குப் பேராண்மை (வீரம்) இருக்க வேண்டும்; எதிரிக்கு ஒரு துன்பம் நேரின் உதவி செய்யும் உள்ளப்பாங்கு, அந்தப்