பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 'இவனை இன்துணை உடையபோர் இராவணன் என்னே புவனம் மூன்றையும் வென்றதோர் பொருள் எனப் புகறல்: (146) (3) பின்னால் நிகழ இருப்பதைத் தன் மிதி நுட்பத்தால் முன்னாலேயே அறிந்து உணர்ந்து அனுமன் கூறுகிறான். இராவணனது தோற்றத்தைக் கண்ட அனுமன், இவனை இராமரால் தவிர பிறரால் வெல்ல முடியுமோ? இவனால் என்னையும் வெல்ல முடியாது; என்னால் இவனையும் வெல்ல முடியாது; எனவே, தாக்குவோமாயின், வீண் காலங்கள் கழிந்து போகுமே தவிரப் பயன் இராது; எனவே, இவனோடு நாம் போர் தொடங்குவது சரியா?என்றெல்லாம் அனுமன் எண்ணுகிறான் : 'கொல்லலாம் வலத்தனும் அல்லன்; கொற்றமும் சொல்லலாம் தரத்தனும் அல்லன்; தொல்லை நாள் அல்லெலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை வெல்லலாம் இராமனால்; பிறரும் வெல்வரோ?' (பிணி வீட்டுப் படலம்-56) "என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன் தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால் அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான் துன்னருஞ் செருத்தொழில் தொடங்கல் தூயதோ?(57) (4) அனுமன், இராவணனது பொல்லாத-மிகுந்த காதல் நோயைக் கண்டதும், சீதை தூய்மையாய் உள்ளாள் என்று திடமாக உணர்ந்தான். அதாவது, இராவணன் இதற்கு முன்பு சீதையோடு உடல் உறவு கொண்டிருந்தால் இவ்வளவு காம நோய் இராதல்லவா? கெஞ்சவும் மாட்டான் அல்லவா? ஆறின சோறு பழங்கஞ்சி -பழகப் பழகப் பாலும் புளிக் கும்' என்னும் பழமொழிகட்கேற்ப முன்பே தொடர்பு கொண்டிருந்தால் இப்போது வெறி கொண்டு அலைய மாட்டான் அன்றோ?