பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 "அந்நிலையான் பெயர்த்துரைப்பான் ஆய்வளைக்கை அணி இழையார் இந்நிலையா னுடன் துயில்வார் உளர் அல்லர் இவன் நிலையும் புன்னிலைய காமத்தால் புலர்கின்றநிலை, பூவை தன்னிலையில் உள்ள என்னும் நலன் எனக்கு நல்குமால்' (222) 7. அறிவுடைமை-நீதி யுணர்வு (1) கும்ப கருணனைக் கண்டதும், அவனைக் கொல்ல வேண்டும் என்று எழுந்த-வடவை முக நெருப்பைப் போன்ற சினத்தை, அனுமன், தன் அறிவு என்னும் கடல் நீரால் அவித்தான்? 'மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெங்கனலை அறிவெனும் பெரும் பாவையம் புனலினால் அவித்தான்' (ஊர் தேடு படலம்-129.) (2) முதல் முதல் மண்டோதரியை நோக்கிய அனுமன் அவளது பண்பான தோற்றத்தைக் கண்டு, இவள் சீதையா யிருப்பாளோ? சீதையாயின் இராவணன் மாளிகையில் இருக்கலாமோ எனச் சினந்தான். சீதை கற்பு நீங்கி இங்கு இருக்கிறாள் எனில், இராமன் புகழோடு யானும் இலங்கை யும் அரக்கரும் அழிய வேண்டி வரும் - இல்லையில்லை; இவள் சீதை அல்லள். சீதை இங்கு வாராள்; யான் எண்ணியது தவறு; இவளைப் பார்த்தால் ஏதோ கவலையோடு இருப்பதாகத் தெரிகிறது. இவள் மண்டோதரியே! இவள் கணவனும் இலங்கையும் அழியக் கூடும்-என்றெல்லாம் ஐயுற்று எண்ணிப் பின்னர்த் தன் அறிவுடைமையால் தெளிவு பெறுகின்றான்.