பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 'அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்தெழு வெந்தீ துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவதோர் துயர் உழந்து இவை சொன்னான்” (197). "கற்பு நீங்கிய கணங்குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் . பொற்பும் யானும் இவ்விலங்கையரும் அரக்கரும் - பொன்று தும் இனறு என்றான்' (198} "கான் உயர்த்தார் இராமன் மேல் நோக்கிய காதல் காரிகை யார்க்கு மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைத்தது மிகை என்றான்' (198) 'மலர்க் கருங்குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள்; உலக்கும் இங்கிவள் கணவனும்; அழிவும் இவ் வியன் நகர்க்கு உளது என்றான்' (200) (3) அனுமன் இராவணனைக் கண்டதும் அவனைக் கொல்ல வேண்டும் எனக் கொதித்து எழுந்தான். பின்னர், வாய் மடித்துக் கைகளைப் பிசைந்து கொண்டு தன் அறிவைப் பயன்படுத்திப் பின் வருமாறு எண்ணித் தணிவு, பெற்றான். இராவணனைக் கொல்லும்படி இராமர் பணிக்க வில்லை. ஒன்றை விட்டு ஒன்று செய்தல் உணர்வுடைமைக்கு அழகாகாது. பின்பு எண்ணிப் பார்க்கின், பெரிய பிழையாக முடியும். நன்னெறியினர் சிவன் போன்ற ஆற்றல் உடையர் எனினும், ஆராயாது எதையும் விரைந்து (அவசரப்பட்டுச்). செய்யமாட்டார்கள் என்றெல்லாம் எண்ணி அமைதி பெற்றான். எப்பொழுதும் பொங்கி எழுந்து உலகை அழிக்கக் கூடிய இயல்புடைய தெனினும், உலகம் அழியக் கூடிய ஊழிக் காலத்தை எதிர்பார்த்திருக்கும் கடல்போல் அனுமன் அடங்கியிருந்ததாகக் கம்பர் புகழ்ந்துள்ளார்.