பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153. 'பேணும் உணர்வே உயிரே பெருநாள் நாண் இன்று உழல்வீர்; தனி நாயகனைக் காணும் துணையும் கழிவீர் அலீர்; நான் பூணும் பழியோடு பொருந்துவதோ' தசரதன் இறக்க, உலகம் துயர் கொள்ளும்படி காட் டிற்கு வந்த கொடியவர்களாகிய இராம இலக்குமணர் இனியும் இங்கு வாராரோ! நாயகரைக் காணும் வேட்கையால் இந்நாள் வரை உயிர் காத்து இருக்கிறேன். அரக்கர் சிறையில் இருந்த என்னை அவர் இனித் தீண்டுவாரா? யான் பிறர் மனம் புகுந்ததை உணர்ந்தும், அந்த இராவணன் சொல்கின்றவற்றையெல்லாம் காதில் வாங்கியும் உயிர் துறக்காமல் நெடுங்காலம் உயிரோடு இருக் கின் றேனே! என் னிலும் கொடிய அரக்கியர் யாண்டுள் ளனர்? 'உன்னினர் பிறர் என உணர்ந்தும், உய்ந்து அவர் சொன்ன ன சொன்னன செவியில் தூங்கவும் மன்னுயிர் காத்து இருங்காலம் வைகினேன் என்னின் வேறு அரக்கியர் யாண்டையார் கொலோ?? (12) கற்புடைப் பெண்டிர் பிறர் மனம் புகார் என்பதை உணர்ந்தும், உயிரோடு தான் இருக்கின்றாளாம். பழி சுமந்தும் இன்னும் உயிரோடிருக்கிறேன். என் குடிப்பிறப்பும் நாணமும் மிக நல்ல! உண்மையான கற்பு உடைய பெண்கள் உலக நடைமுறையில் இல்லை போலும்! கதைகளில் மட்டுமே கற்புடைய பெண்கள் இருந்த தாகச் சொல்லப்படுகின்றார்களோ கணவரைப் பிரிந்தும் உயிர் வாழ்பவர் யார் உளர்? சு-10