பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 "...நாடு வறங்கூர நாஞ்சில் துஞ்சக் கோடை நீடிய பைது அறுகாலை குன்றுகண்டன்ன கோட்ட, யாவையும் சென்று சேக் கல்லாப் புள்ள, உள் இல் என்றுாழ் வியன்குளம் நிறைய வீசிப் பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந் தற்றே தோழி...' என்பது புலவர் கபிலர் பாடிய (42:5-12) பாடல் பகுதி. தாஞ்சில் (கலப்பை) துஞ்சுகிறதாம் (தூங்குகிறதாம்); கோடை நீண்டுவிட்டதாம்; பசுமை முற்றிலும் அற்று விட்ட தாம்; குன்று கண்டாற்போன்ற கோட்ட (கரையை உடைய) குளமாம்; யாவையும் சென்று சேக்கல்லாப் புள்ள (பறவை கள் இல்லாத குளமாம்; உள் இல் குளமாம்; என்றுாழ் (வெப்பமான) குளமாம்; வியன் (பெரிய) குளமாம். இத்தகைய கோடையில் இத்தகைய குளம் நிறையும் படி பெய்த மழை எவ்வளவோ மிகுதியாய் இருக்க வேண்டுமல்லவா? நீர் அற்ற குளத்தின் கரை குன்றுபோல் மிக உயரமாகத் தோன்றும். சுற்றிலும் கரை உயரமாயிருப்ப தால் வெளியிலிருந்து தண்ணிர் உள்ளே வருவதற்கில்லை. துளித்துளியாய் உள்ளே விழுந்த தண்ணிரே குளத்தை நிறைத்துவிட்டதாம். " ... பெரும்பாலும் இத்தகைய இயற்கைக் கற்பனை ஓவியங் களையே கழக இலக்கியங்களில் காணலாம். இங்கே இல்லாததைச் சொல்லவில்லையே-இதை எவ்வாறு கற்பனை என்று கூற முடியும்? ஒ. அதுவா? ஏர் கலப்பை தூங்குகிறது என்பதே ஒர் இயற்கைக் கற்பனைதானே! பெரிய குளம் நிறைய மழை பெய்தது என்று சொன்னால் போதுமே! ஆனால், குளத்தைப் பற்றி இவ்வளவு கூறியிருப் பது ஓர் இயற்கைக் கற்பனை ஓவியந்தானே!