பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 'மானுடர் இவரென மனக்கொண் டாயெனின் கானுயர் வரை நிகர் சார்த்த வீரியன் தானொரு மனிதனால் தளர்ந்துளான் எனின், தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால்' (123 இராம இலக்குமணர் இருவர்தானே என்று எளிதாய் எண்ணி விடாதே. உன்னை அழிக்க ஒருவரே போதும் . போர் நேரின் இயான் கூறுவது உண்மை என அறிவாய்) செல்வம் இழந்து வீணே அழியாதே. (124) இரணியாட்சன், இரணிய கசிபு முதலிய அரக்கர்கள் அழிந்ததை எண்ணிப்பார். (124) செல்வத்தையும் உறவினரையும் இழக்க நீ அறம் பிழைக்கின்றனை. அறத்தை விரும்ப மாட்டாயோ? (127). மிக்க வலிமை உடையவராயிருந்தும், அறம் பிறழ்ந் தவர் அழிந்தே தீர்ந்தனர். (128) அகத்தியர் முதலிய முனிவர்கள் உன்னைக் கொல்லும் படி இராமரிடம் கூறினர். யானே என் காதால் கேட்டேன்' அதற்கு ஏற்றபடியே நீயும் அழியப் பார்க்கிறாய். (129) உன் தங்கை சூர்ப்பணகையின் மூக்கையும் உன்னைச் சேர்ந்தவரின் தோளையும் தாளையும் சிதைத்தவரின். வலிமையை நீ எண்ணிப் பார்க்கமாட்டாயா? (130) தன் ஆயிரம் கைகளால் உன் இருபது கைகளை முறித்து, உன் வாய் குருதி சிந்தச் செய்து உன்னைச் சிறையிட்ட கார்த்த வீரியனின் தோள்களை வெட்டிய பரசு ராமன் இராமனால் வெல்லப்படடதை நீ அறியாயோ? “ஆயிரம் தடக்கையால் நின் ஐந்நான்கு கரமும் பற்றி, வாய்வழிக் குருதி சோரக் குத்தி வான் சிறையில் வைத்த தூயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் நீ அறிந்திலையோ? நீதிநிலை அறிந்திலாத நீசா (131)