பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 பாம்பு மந்திரத்தால் கட்டுப்படுவதுண்டு. ஆனால் உனக்கு நல்லது-கெட்டது கூறித் திருத்துபவர் சிலர்;. உன்னுடன் பேசி உன்னை முடிப்பவரே உளர்’ (132) என்றெல்லாம் சீதை நயமாகவும் கூறி இராவணனைத் திருத்த முயன்றாள். 2. அனுமனின் அறிவுரை இராவணனைத் திருத்த அனுமன் பின்வருமாறு: நயவுரை பகர்ந்தான்; பிணி வீட்டுப் படலம்: இராவணா? உன் வாழ்க்கையை வீணே கெடுத்துக் கொள்கிறாய், அறம் இன்றித் தீமையே புரிகிறாய். உனக்கு அழிவு நேர இருக்கிறது; ஆயினும், இன்னும் ஒரு நல்லுரை. சொலவேன்; கேட்டு நடக்கின் உயிர் பிழைப்பாய். "வறிது வீழ்த்தனை வாழ்க்கையை, மன் அறம் சிறிதும் நோக்கலை, தீமை திருத்தினாய்; இறுதி உற்றுளது; ஆயினும் இன்னும் ஓர் உறு தி கேட்டி, உயிர் நெடிது ஒம்புவாய்.” (87) சீதையை விரும்பியதால் உன் தவம் கெட்டது. என்று மே தீமை நன்மையை அழிக்க முடியாது. காமத் தால் மயங்கியவர் கெட்டாரே யன்றித் தப்பவில்லை. அறம் நீங்கியவர் யார் உருப்பட்டார். காமம் பலரை அழித் துள்ளது. உயர்ந்தவர் பொருளும் காமமும் விட்டு அருளும் ஈதலும் கொள்வர். பிறர் மனைவியை விரும்பும் கொச்சை. (இழிந்து) ஆண்மை புகழுக்கு உரியதா? வெறுப்பவளை விரும் பலாமா? அது ஒரு வாழ்வா? மூக்கு அறுபடின் அழகாகுமா? ஆயிரம் தலை இருப்பினும் தீமை புரியின் சிறிதும் ஆக்கம் உண்டாகாது. சிவன் தந்த வரம் தவறினும்